கேர்கஸ்வோர்ல்ட் கீழ்ப்பிரிவு மக்களுக்கு புதிய பாலம். – ஊடகங்களுக்கு மக்கள் நன்றி.

0
199

கடந்த காலங்களில் மிகவும் அவதானமான நிலையில் தங்களுடைய அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக உடைந்த கம்பிப் பாலத்தில் மிகவும் ஆபத்தான நிலையில் தொங்கியே தங்களது பயணங்களை மேற்கொண்டனர். குறித்த ஆபத்தான விடயத்தினை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பியதன் காரணமாக குறித்த பாலம் நோர்வூட் பிரதேச சபையினால் மிகக் குறுகிய காலத்தில் புனரமைத்துக்கொடுத்துள்ளனர். இதனால் மக்கள் இன்று தங்களுடைய தேவைகளை இலகுவாக பூர்த்தி செய்யக்கூடிய நிலை காணப்படுகின்றன. இதற்காக நாங்கள் ஊடகங்களுக்கும் நோர்வூட் பிரதேச சபைக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் என பொகவந்தலாவை டின்சின் கேர்கஸ்வோல்ட் கீழ்ப்பிரிவு மக்கள் இன்று தெரிவித்தனர்.

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட கேர்கஸ்வோர்ல்ட் கீழ்ப்பிரிவு தோட்ட குடியிருப்புகளுக்கு செல்லும் பிரதான பாலமாக் குறித்த பாலம் காணப்பட்டது. இந்த பாலம் கடந்த பல வருடங்களாக உடைந்து போய் மிகவும் ஆபத்தான நிலையிலேயே காணப்பட்டது. பாடசாலை மாணவர்கள் , வேலைக்கு செல்லும் பொதுமக்கள் என பலரும் ஆபத்தான இந்த பாலத்தினையே பயன்படுத்தி வந்தனர். இதனால் ஒருசிலர் விழுந்து காயங்களுக்கும் உட்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த பாலத்தினை புனரமைத்து தருமாறு நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்த அரசியல் தலைவர்களிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்த போதிலும் அவர்கள் வருகைதந்து பார்வையிட்டு சென்றார்களே தவிர அதனை செய்து கொடுக்கவில்லை. இதனால் அன்றாடம் இந்த பிரதேச மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்தனர்.

பாடசாலை மாணவர்கள் உரிய நேரத்திற்கு பஸ்ஸிற்கு செல்ல முடியாதததன் காhரணமாக கற்றல் நடவடிக்கைகளும் பாதிப்புக்குள்ளானதாகவும் இந்த குறிக்கு வழியினை பயன்படுத்த முடியாத முதியவர்கள் சுற்றி வரவேண்டிய நிலை காணப்பட்டதாகவும் ஊடகங்களில் இவர்கள் படும் கஸ்டங்களை எடுத்துக்காட்டியதை தொடர்ந்து நோர்வூட் பிரதேச சபை குறுகிய காலத்தில் இந்த பாலத்தினை நிர்மாணித்துக்கொடுத்துள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பாலம் நிரர்மாணிக்கப்பட்டதன் காரணமாக இந்த தோட்டத்தில் வாழும் பல நூறு குடும்பங்களின் அங்கத்தவர்கள் நன்மையடைகின்றனர்.

கே.சுந்தரலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here