மருதபாண்டி ரமேஸ்வரன் அவர்களின் நத்தார் தின வாழ்த்து செய்தி.

0
200

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஸ்வரன் அவர்களின் நத்தார் தின வாழ்த்து செய்தி.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யேசு கிறிஸ்து பிறப்பான நத்தார் தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் இன்முகத்துடன் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன் .

ஏழை மக்களின் வாழ்வில் இன்பம் கிட்டவேண்டும் என்பதற்காகவே கன்னி மரியாள் வயிற்றில் ஏழ்மையின் அவதாரமாய் அவதரித்தவர் யேசு கிறிஸ்து.
அவரின் பிறப்பு மிக எளிமையானது அவரின் பிறப்பானது ஏழை மக்களின் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்ப்படுத்தியது. எனவே நாம் இன்றும் அடிப்படை உரிமைகளையும் சலுகைகளையும் பெற வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.எமது மக்களின் அடையாளம் மற்றும் இருப்பை தக்கவைத்து கொள்ள வேண்டும்.
அத்துடன் போட்டி மனப்பான்மை,வெறுப்பு,விரக்தி,பொறாமை இவை அனைத்தையும் கைவிட்டு உலகிற்கு புதிய வெளிச்சத்தை உருவாக்கி ஏழை மக்களுக்காகவே ! அவதரித்த குழந்தை யேசுபிரான் பிறந்த புனித நத்தார் நாளில் நாம் உறுதி எடுத்துக் கொண்டு எமது வாழ்வில் சிறந்த மாற்றங்களைக் நோக்கி பயணிப்போம்.

இன்றைய சூழ்நிலையில் கொவிட் 19 கொரோனா தொற்றிலிருந்து எம்மையும் எமது உறவினர்களையும் நண்பர்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக நாம் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என ,தெரிவித்துள்ளார்.

க.கிஷாந்தன், கே.சுந்தரலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here