பாவத்தின் இருளகற்றி சகோதரத்துவத்தை உணர்துகிறது நத்தார்!

0
164

பாவத்தின் இருளகற்றி சகோதரத்துவத்தின் உணர்வை மேம்படுத்துவதாக நத்தார் பண்டிகை கொண்டாப்படுகிறது. இந்த புனித நாளை கொண்டாடும் இலங்கைவாழ் அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

”உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான கிறிஸ்தவர்களின் உள்ளங்களில் இறைவன் மீதான பக்தியுணர்வை தூண்டும் இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடர்புடைய நத்தார் பண்டிகையானது உன்னதமான சமயப் பண்டிகையாகும்.

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையும் கொள்கைகளும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்களுக்கு பலம் தருகின்றன. அவரது வாழ்க்கைப் பாதை ஒரு நியாயமான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதற்கான வழியை காட்டுகிறது. இந்த பண்டிகை சமுதாயத்தில் அமைதி மற்றும் சகோதரத்துவத்தின் உணர்வை மேம்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

பாலக இயேசுவின் பிறப்பு உலக மக்கள் அனைவரையும் கொறோனா தொற்றில் இருந்து பாதுகாத்து இந்த தொற்று நோய் உலகில் இருந்து முற்றாக அகல வேண்டுமென பிராத்தியுங்கள்” – எனவும் எஸ்.ஆனந்தகுமார் தமது நத்தார் தின வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here