தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மடக்கும்புர தொழிற்சாலை பிரிவில் உள்ள தெப்பக்குளத்தில் பெண் ஒருவரின் சடலம் 02/01/2022 ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
காலை 10 மணியளவில் மீட்கப்பட்ட குறித்த பெண்ணின் சடலம் மடக்கும்புர மேற்பிரிவை சேர்ந்த சுமார் 55 வயதுடைய ரமணி எனும் பெண்ணின் சடலம் என தலவாக்கலை பொலிசார் மடக்கும்புர மக்களின் உதவியோடு அடையாளம் கண்டதோடு மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
நீலமேகம் பிரசாந்த்