ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் கடந்த புதன்கிழமை கன்றுக்குட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.ssssssss
அல்வார் மாவட்டத்தில் உள்ள பிவாடி பகுதியில் உள்ள சுஹாத்பூர் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நான்கு ஆண்கள் பசுவுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, ராஜஸ்தான் பொலிஸார் நான்கு பேரை கைது செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
குறித்த காணொளியில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் சாலையில் படுத்திருந்த கன்றுக்குட்டியை பாலியல் வன்கொடுமை செய்கிறார் எனவும், மற்றொருவர் கன்றுக்குட்டி சத்தம் போடாமல் தடுக்கிறார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தின் போது மேலும் இருவர் உடனிருந்தனர். அவர்களில் ஒருவர் இந்த செயலை படம் பிடித்ததாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, ஜுபைர், தலிம், வாரிஸ் மற்றும் சுனா எனப்படும் நால்வரை ராஜஸ்தான் பொலிஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து பொலிஸ் அதிகாரி சாந்தனு குமார் சிங்,
‘தகவல் கிடைத்ததும் பொலிஸார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். புகாரை பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினோம். தற்போது குற்றம்சாட்டப்பட்டவர்களில் இருவரை நாங்கள் கைது செய்துள்ளோம். மற்ற இருவரையும் விரைவில் பிடிப்போம் என்று உறுதியாக நம்புகிறோம்’, என தெரிவித்துள்ளார்.