விடிந்தால் விலையேற்றம். மக்களை அன்றாடம் அரசாங்கம் படுகுழிக்குள் தள்ளுகின்றது.

0
179

நாட்டில் விலையேற்றம் உச்ச நிலையை அடைந்துள்ளது.விடியும் ஒவ்வொரு நாளும் மக்கள் பயத்துடனே கண்விழிக்க வேண்டியுள்ளது. அவ்வாறான ஒரு நிலைக்கு அரசாங்கம் நாட்டை சீர்குழைத்து வைத்து விட்டதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் குறிப்பிடுகின்ற போது நாட்டில் ஒவ்வொரு பொருட்களுக்கும் வரிசையில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது.மாற்றம் வேண்டுமென வாக்களித்தவர்களுக்கு இப்படியொரு மாற்றத்தை இவ்வரசாங்கம் வழங்குமென எவரும் எதிர்பார்க்கவில்லை.இந்நிலை தொடருமானால் காலப்போக்கில் இலங்கையும் வளர்ச்சிகுன்றிய நாடுகளின் பட்டியலில் இடம்பிடிக்க நேரிடலாம்.அரசாங்கத்தின் சரியான திட்டமிடல்லை,முகாத்துவமில்லை அடுத்த கட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டிய தீர்மானங்களும் இல்லை.

இந்நிலை தொடர்ந்து நீடிக்குமானால் மக்களின் வாழ்க்கை மிகப்பெரும் போராட்டமாக மாறிவிடும்.உடனடியாக இவ்வரசாங்கம் வெளியேற வேண்டும் இல்லையென்றால் உடனடியாக நாட்டு பிரச்சனையை தீர்க்க ஏதாவது நியாயமான யோசனையை முன்வைக்க வேண்டும்.மக்கள் நம்பியே வாக்களித்துள்ளனர்.விடியும் ஒவ்வொரு நாளும் நாட்டில் விலைவாசி உயர்ந்து கொண்டேசெல்கின்றது.அந்த அளவிற்கு மக்களுக்கு வருமானமும் இல்லை .எனவே நாட்டை கொண்டு செல்ல கூடியவர்களிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு இவ்வரசாங்கம் விலக வேண்டும் என ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

நீலமேகம் பிரசாந்த்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here