ஆசியாவின் அதிசயம்…! 50 வருடங்களின் இலங்கையில் பின் பாவனைக்கு வந்துள்ள பொருட்கள்

0
155

இலங்கையில் 50 வருடங்களின் பின்னர் விளக்குகள் மற்றும் கரி இஸ்திரி பெட்டி பாவனைக்கு வந்துள்ளன.

கடந்த நாட்களாக நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக சிம்னி விளக்குகள் மற்றும் கரி இஸ்திரி பெட்டிகள் மீண்டும் சந்தைக்கு பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்னி விளக்குகள் மற்றும் கரி இஸ்திரி பெட்டிகளுக்கு நுகர்வோரிடம் அதிக கோரிக்கை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதற்கமைய குறித்த இரண்டு பொருட்களும் விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

சிம்னி விளக்குகள் 1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், விளக்குகளின் போத்தல்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

கரி சூடாக்கி ஆடைகளை தேயக்கும் இஸ்திரி பெட்டிகள் 2000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here