தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் இல்லத்தின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த இராணுவ சிப்பாய் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வெள்ளவத்தையில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் இல்லத்தில் இன்று சனிக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
22 வயதான குறித்த இராணுவ சிப்பாய் தமது கடமை நேர துப்பாக்கியை பிரயோகித்து தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர், கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனின் இல்லத்திற்கு செல்லும் ஒழுங்கையில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.