அதிக விலைகளுக்கு விற்கும் பொருட்கள் தொடர்பில் பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபைக்கு முறைப்பாடு.

0
195

நுவரெலியா மாவட்டத்தில் அதிக விலைக்கு விற்கும் பொருட்கள் தொடர்பில் அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளர் கதிர்செல்வன் மற்றும் இ.தொ.கா உபதலைவர் சச்சுதானந்தன் பொருட்கள் பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர்.

அதாவது நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.இந்நிலையில் ஒருசில வர்த்தகர்கள் பழைய விலையில் கொள்வனவு செய்யப்பட்டுள்ள பொருட்களின் விலைப்பட்டியலை மறைத்து புதிய விலைபட்டியலை ஒட்டி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

இவ்வாறான வர்த்தகர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கையை எடுக்க கோரி இம்முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது நுவரெலியா மாவட்டத்தில் காணப்படுகின்ற அனைத்து கடைகளையும் பரிசோதனை செய்து பழைய பொருட்களுக்கு போலி புதிய விலைகளை ஒட்டி விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்க கோரி பாவனையாளர்கள் அதிகார சபைக்கு முறைப்பாடு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here