அக்கரப்பத்தனை கிளைஸ்டல் தோட்டத்தில் 80 இலட்ச பெறுமதியான சிறுவர் பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு.

0
225

அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்ட கிளைஸ்டல் பிரிவில் 80 இலட்சம் ரூபா பெறுமதியான சிறுவர் பராமரிப்பு நிலையம் உத்தியோகப்பூர்வமாக புதன்கிழமை (29/06/2022)திறந்து வைக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் நிதியொதுக்கீட்டில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் கண்காணிப்பில் இவ் சிறுவர் பராமரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது இ.தொ.கா உபத்தலைவர் சச்சுதானந்தன் ,தோட்ட முகாமையாளர்,பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதிய உத்தியோகத்தர்கள்,தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர்கள்,ஆரம்ப பள்ளி மாணவர்கள், தோட்ட பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here