ஊடக அடுக்கு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹட்டன் மல்லியைப்பூ சந்தியில் சத்தியாகிரக போராட்டம்.

0
179

ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதற்கும் ஊடக அடக்கு முறைக்கும் எதிர்ப்பு தெரிவித்த ஹட்டன் மல்லியைப்பூ சந்தியில் சத்தியகிராக போராட்டம் ஒன்று இன்று (13) திகதி நடைபெற்றது.
ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்கு முறைக்கு எதிரான மக்கள் குரல் எனும் தலைப்பில் குறித்த சத்தியாகிரக போராட்டத்தினை பரந்தப்பட்ட வெகுசன இயக்கம் நுவரெலியா மாவட்ட அமைப்பினர் ஒழுங்கு செய்திருந்தனர்.

சத்தியாகிரக போராட்டக்காரர்கள் ‘ஊடக சுதந்திரத்தை பாதுகாப்போம் அராஜகத்திற்கு அடிபணியேயுhம்’ஒழிக உன் ஊழல் ஆட்சி எழுக எம் மக்கள் ஆட்சி’ஜனநாயகத்தின் நெற்றுகண் சுதந்திர ஊடகம்’ போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டகளை ஏந்திய வண்ணம் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
குறித்த போராட்டத்திற்கு சமையத் தலைவர்கள்,சிவில் அமைப்புக்கள் மக்கள் பிரதிநிதிகள்,சமூக சேவகர்கள்,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இங்கு உரையாற்றியர்கள் கருத்து தெரிவிக்கையில்; இந்த நாட்டில் புதிய ஜனநாயத்தினை ஏற்படுத்துவதற்காக கொழும்பில் போராடிய இளைஞர்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலும் ஜனநாயகத்தின் நெற்றிக்கண்ணாக திகழும் ஊடக அடக்கு முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவுமே இன்று நாங்கள் ஒன்று கூடியுள்ளோம்.
இந்த நாடு ஒரு குடும்பத்திற்கு சொந்தமான நாடல்ல இது தமிழ் சிங்கள முஸ்லிம் அனைத்து இனத்திற்கும் அனைவருக்கும் சொந்தமான நாடு ஆகவே இந்த நாட்டை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள் தங்களின் விருப்பு வெறுப்புக்கேற்ப ஆட்சி செய்ய முடியாது. என்பதனை இன்று இளைஞர்கள் நிரூபித்துள்ளனர்;

ஆகவே ஆட்சியாளர்கள் இந்த நாட்டிக்கு அன்பு செலுத்தி நாட்டு மக்களின் நலன் தொடர்பாக செயப்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அதே நேரம் மக்களின் குரலாக இருக்கும் ஊடக வியலாளர்கள் தாக்கப்படும் போது மக்கள் ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். கருத்து தெரிவித்தனர்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here