கோட்டா உத்தியோகப்பூர்வமாக பதவி விலகினார்

0
209

கோட்டாபய ராஜபக்ச தமது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு வழங்கியுள்ளார்.

அவரது பிரதிநிதி ஒருவர் ஊடாக அவர் இந்த கடிதத்தை கையளித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சிங்கப்பூரை சென்றடைந்ததும் அவர் தமது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகரிடம் கையளிப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி மாலைதீவில் இருந்து இன்று மாலை சிங்கப்பூரை சென்றடைந்த கோட்டா தமது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி உள்ளார்.

இந்த நிலையில் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க அந்த பதவிக்கான சத்திய பிரமாணத்தை நாளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here