என் தாய் நாட்டுக்காக தொடர்ந்தும் சேவையாற்றுவேன்

0
180

இலங்கையின் ஜனாதிபதி பதிவியில் இருந்து கோட்டபாய ராஜபக்ச விலகிய நிலையில் வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் வங்கிகளினூடாக பணம் அனுப்பும் நடவடிக்கைகயை ஆரம்பித்துள்ளதனால் நாட்டில் டொலர் வரத்து அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

நாட்டில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து ”ஜனாதிபதி பதவி விலக வேண்டும்” என மக்கள் போராடினார்கள்.

அதேவேளை கோட்டாபய ஜனாதிபதி பதவியைவிட்டு விலகும் வரை வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் நாட்டிற்கு பணம் அனுப்ப மாட்டோம் என கூறியிருந்தனர்.

இந்த நிலையில் தற்போது கோட்டபாய பதவி விலகிய நிலையில் வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் வங்கிகளினூடாக பணம் அனுப்ப ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதன் காரணமாக தற்போது இலங்கையில் டொலரின் கையிருப்பு அதிகரித்து வர ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் தொடர்ந்தும் தாய் நாட்டுக்காக சேவையாற்றுவேன் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று வாசிக்கப்பட்ட அவரது இராஜினாமா கடிதத்திலேயே இதனை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இன்று பாராளுமன்றம் கூடிய போது சபாநாயகருக்கு அனுப்பப்பட்ட இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க வாசித்தார்.

அந்தக் கடிதத்தில், நான் ஜனாதிபதியாக பதவியேற்ற 3 மாதங்களுக்குள் கொவிட் தொற்று உலகம் முழுவதையும் பாதித்தது.

அந்த நேரத்தில் இலங்கையை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து திருப்தியடைவதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பொது முடக்கங்களை அமுல்படுத்தியதன் மூலம், நாடு அந்நியச் செலாவணியை இழந்ததாகவும், ஏற்கனவே பாதிக்கப்பட்ட பொருளாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டதாகவும் தனது இராஜிநாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையற்ற பொருளாதார தன்மைக்கு தீர்வுகாணும் நோக்கில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க அனைத்துக் கட்சிகளுக்கும் பாராளுமன்றில் நான் அழைப்பு விடுத்தேன்.

பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முழுமையாக நான் முயற்சி எடுத்தேன் என்பதை நம்புக்கின்றேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here