பாடசாலை மாணவர்களுக்கான சீருடையின் ஒரு தொகுதியை சீனா வழங்குகிறது!

0
212

பாடசாலை மாணவர்களுக்கு 2023 ஆம் ஆண்டுக்கு தேவையான பாடசாலை சீரடையின் ஒரு பகுதியை வழங்க சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் கோரிக்கைக்கு சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பாடசாலை சீருடைக்குத் தேவையான மீதித் தொகையை உள்ளுர் விநியோகஸ்தர்களிடமிருந்து கொள்வனவு செய்யவுள்ளதாகவும், இவ்வருட் இறுதிக்குள் பாடசாலை மாணவர்களுக்கு துணிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளை வழங்குவதற்கு பதிலாக, சீருடைகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சரை வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here