மின்சாரம் தாக்கி கனவரல்ல தோட்ட இளைஞர் உயிரிழப்பு

0
217

கனவரல்ல EGK தோட்ட பிரிவில் தோட்ட தொழிற்சாலையில் கடமை புரிந்த, 25 வயதுடைய அதே தோட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தோட்ட தொழிற்சாலை அதிகாரி ஒருவரின் குடியிருப்புக்கு நீர் குழாய் திருத்துவதற்காக சென்ற வேளை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

பின்னர் நீர்க்குழாய் திருத்தச் சென்ற நபர் மிக நீண்ட நேரமாகியும் வராததால் காவலாளி சென்று பார்த்த போது குறித்த நபர் மின்சாரம் தாக்கி கீழே கிடப்பதை அவதானித்துள்ளார்.

இதன்போது கூக்குரலிட்டு அயலவர்களை வரவழைத்ததன் பின்னர் உடன் நமுனுகுலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

இதன்போது, பசறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது குறித்த நபர் ஏற்கனவே இறந்துள்ளார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலதிக விசாரணைகளை நமுனுகுலை பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு, சடலம் தற்போது பசறை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here