மலையக தொழிலாளர் முன்னணி மற்ற தொழிற்சங்கங்களுக்கு ஓர் முன்னுதாரணம். நடராஜா தெரிவிப்பு.

0
196

மலையக தொழிலாளர் முன்னணி ஏனைய தொழிற்சங்கங்களுக்கு ஓர் முன்னுதாரணம் என மலையக தொழிலாளர் முன்னணியின் பணிப்பாளர் நடராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறுகின்ற போது தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் பொருளாதார நெருக்கடி பாரிய அளவில் காணப்படுவதோடு மலையகத்திலும் மிக பாரிய அளவில் வறுமான சிக்கல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் தொழிற்சங்கத்துக்கான சந்தாப்பணம் அறவிடப்படுவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் தொழிலாளர்களின் நலன் கருதி உருவாக்கப்பட்டுள்ள மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்கமான மலையக தொழிலாளர் முன்னணியின் அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளத்தோடு தீபாவளி முற்பணத்தையும் வழங்கியுள்ளமை பெரும் வரவேற்க தக்க விடயம்.

தொழிற்சங்கத்துக்கான சந்தாப்பணம் இடைநிறுத்தப்பட்டாலும் தொழிற்சங்க ஊழியர்களுக்கும் குடும்பம் உள்ளதென அறிந்து இவ் இக்கட்டான சூழ்நிலையில் மாத சம்பளத்தோடு தீபாவளி முற்பணத்தையும் தன் சொந்த பணத்தில் வழங்கிய ம.ம.முன்னணி தலைர் ராதாகிருஸ்ணன் மற்றும் உதவியாக இருந்த புஸ்பா விஸ்வநாதனுக்கும் நன்றியை தெரிவித்து கொள்ளவதாகவும் ஏனைய தொழிற்சங்கங்களை விட ஓர் முன்னுதாரணமான தொழிற்சங்கமாக மலையக தொழிலாளர் முன்னணி காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

 

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here