மலையக சமூகம் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து 200 வருட பூர்த்தியினை முன்னிட்டு சிறுவர்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து தெளிவூட்டு ஊர்வலம் ஒன்று நேற்று (22) திகதி ஹட்டனில் நடைபெற்றது.
குறித்த ஊர்வலம் ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் காலை 9.30 மணியளவில் ஆரம்பித்து ஹட்டன் நகர் ஊடாக ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் வரை ஊர்வலமாக சென்றனர்.
இந்த ஊர் வலத்தில் சுமார் 500 மேற்பட்ட சிறுவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
ஊர்வலத்தில் கலந்து கொண்ட சிறார்கள் வளமான வாழ்விற்கான ஊர்வலம், ஆரோக்கியத்திற்கான ஊர்வலம், பாதுகாப்பிற்கான ஊர்வலம்,கல்விக்கான ஊர்வலம் மலையக சிறுவர்களை பாதுகாப்போம் போன்ற சுலோக அட்டைகளை காட்சிப்படுத்தியவாறு கோசமிட்டதுடன் மேள மதள இசைகளும் சிறுவர்களால் இசைக்கப்பட்டன.மலையக சிறுவர்கள் 200 வருட காலமாக கல்வி சுகாதாரம், போசாக்கு பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இதன் போது எடுத்துக்காட்டப்பட்டன.
அதனை தொடர்ந்து சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கும் நிகழ்வு ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய கலாசர மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் வெற்றிபெற்ற மாணவர்கள் பரிசில்கள் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன். சிறுவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.ஹட்டன் சமூக நல நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் கல்வி துறைச்சார்ந்தவர்கள் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் மதகுருமார்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்;
மலைவாஞ்ஞன்




