யாழில் பேரூந்தில் பயணித்த யுவதியை பிளேட்டால் வெட்டிய இளைஞர்!

0
211

பேருந்தில் இளம் பெண்ணைப் பிளேட்டால் வெட்டிக் காயப்படுத்திய இளைஞரை பேருந்தில் பயணித்த சக பயணிகள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று வவுனியா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த பேருந்தில் சன நெரிசலில் குறித்த இளைஞர் தனக்கு முன்னால் நின்ற யுவதியைப் பிளேட்டால் வெட்டியுள்ளார்.

காயத்துக்குள்ளான யுவதி சத்தமிடவே சக பயணிகள் சுதாகரித்துப் பிளேட்டால் வெட்டிய இளைஞரை பேருந்துக்குள் மடக்கிப் பிடித்தனர். குறித்த இளைஞர் யாழ். எழுதுமட்டுவாழ் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here