நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை தொடர்ந்து பல்வேறு தொழில் துறைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அத்தியவசிய பொருட்களின் விலைகளும் என்றுமில்லாதவாறு உயர்ந்துள்ளன. இந்நிலையில் மலரவுள்ள திபாவளி பண்டியிகையினை கொண்டாடுவதற்கு மலையக மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.கடந்த காலங்களை போல் ஆடம்பர பொருட்களுக்கு முக்கியத்துவமளிக்காது இம்முறை தீபாவளியினை கடமைக்கு முக்கியத்துவமளித்து கொண்டாடுவதற்கு தேவையான பொருட்களை மாத்திரம் கொள்வனவு செய்துவருவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் இன்று ஹட்டன் நகரில் அத்தியவசிய பொருட்களையும் பூசைப்பொருட்களையும் உடைகளையும் கொள்வனவு செய்வதற்காக ஏராளமான பொது மக்கள் வருகை தந்திருந்தனர்.இதனால் அத்தியவசிய கடைகளிலும் மரக்கறி கடைகளிலும் ஜவுலிகடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதுடன் வர்த்தக நடவடிக்கைகளும் கூ10டு பிடித்திருந்தன.
இதே அரசாங்கம் ஒரு சில அத்தியவசிய பொருட்கள் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் ஹட்டன் நகரில் உள்ள பல கடைகளில் இந்த பொருட்களுக்கு குறைக்கப்படவில்லை. எனவும் குறிப்பாக சத்தோச நிலையங்களில் கூட குறைக்கப்பட்ட அளவு குறைக்கவில்லை. என்றும் பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இது குறித்து விலைகட்டுப்பாட்டு அதிகாரிகள் சபை மற்றும் நுகவோர் கட்டுப்பாட்டு அதிகாரிகள் எவ்வித கவனமும் எடுப்பதில்லை என்றும் இவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மலைவாஞ்ஞன்




