தடைப்பட்ட போக்குவரத்து வழமைக்கு திரும்பியது

0
172

தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியில் தலவாக்கலை ஒலிரூட் பகுதியில் சரிந்து விழுந்த பாரிய மண்சரிவு அகற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து 26.10.2022 அன்று மதியம் முதல் அவ்வீதி ஊடான போக்குவரத்து நடவடிக்கை வழமைக்கு திரும்பியது.தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியில் தலவாக்கலை ஒலிரூட் பகுதியில் (25.10.2022) அன்று மாலை 6 மணியளவில் பாரிய மண்சரிவு ஏற்பட்டதனால் அவ்வீதி ஊடான போக்குவரத்து முற்றாக முடங்கியது.இதனால் மண்சரிவை அகற்றி இயல்புநிலை திரும்பும் வரை தலவாக்கலையிலிருந்து பூண்டுலோயா செல்லும் அதேபோல பூண்டுலோயாவில் இருந்து தலவாக்கலை வரும் பயணிகள் மாற்று வழியை பயன்படுத்தினர்.

இந்நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் இன்று (26.10.2022) காலை முதல் மண்சரிவை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மதியம் 12.30 மணியளவில் மண்சரிவு அகற்றப்பட்டது.எனினும், சீரற்றகாலநிலை தொடர்ந்தால் மண்சரிவு ஏற்படும் அபாயமிருப்பதால் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு சாரதிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here