சஜித் பிரேமதாஸ ஒருவரே மக்கள் மனதை புரிந்து கொள்ளக்கூடியவர் அதனாலேயே அவரின் செயற்பாடுகளும் எண்ணங்களும் மக்கள் நலன் சார்ந்ததாகவே உள்ளதென மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளரும் கொட்டகலை வர்த்தக சங்க தலைவருமான புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் கோரிக்கைக்கு இணங்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் கல்வி அபிவிருத்தி திட்டமான ‘பிரபஞ்சம்’ திட்டத்தின் கீழ் கொட்டக்கலை கேம்பிரிட்ஜ் கல்லூரி தேசிய பாடசாலைக்கு பேருந்தொன்றை அன்பளிப்பு செய்யும் வைபவம் நாளை 30 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது.
இவ்விடயம் தொடர்பில் குறிப்பிட்ட போதே புஸ்பா விஸ்வநாதன் இவ்விடயத்தை சுட்டிக்காட்டினார்.இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் தமிழ் முற்போக்கு கூட்டணி முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் கொட்டக்கலை கல்லூரி கேம்பிரிட்ஜ் தேசிய பாடசாலைக்கு பேருந்து வழங்கப்பட உள்ளது.இது போல பல வேலைத்திட்டங்களை மலையக மக்களுக்கு மேலும் வழங்குதாக உறுதியளித்துள்ளார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம். தற்போது அரசாங்கத்தில் இல்லாத போதும் மலையக மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவைகளை மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.ராதாகிருஸ்ணன் ஊடாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஊடாகவும் ஆற்றி வருகின்றோம்.எனவே இனி வரும் காலங்களில் எவ்வாறெல்லாம் எம்மால் சேவை செய்ய முடியுமோ முடிந்தவரை எம் மக்களுக்கு சேவைகளை ஆற்ற நாங்கள் தயாராகியுள்ளோம். எனவும் புஸ்பா விஸ்வநாதன் குறிப்பிட்டார்.
நீலமேகம் பிரசாந்த்




