தோட்டத்தொழிலாளியின் மரணத்துக்கு உடன் தீர்வு வேண்டும்.பணிபகிஸ்கரிப்பை முன்னெடுத்தனர் டயகமகிழக்குபிரிவினர்.

0
237
டயகம கிழக்கு மூன்றாம் பிரிவில் மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்ததாக கூறப்படும் 48 வயதுமிக்க மூன்று பிள்ளைகளின் தந்தையான இராமகிருஸ்ணனுக்கு உடனடியாக தோட்ட நிர்வாகமும் அக்கரப்பத்தனை கம்பனியும் உடனடியான தீர்வினை வழங்குமாறு டயகம கிழக்கு மூன்று பிரிவுகளை சேர்ந்த தோட்டத்தொழிலாளர்கள் பணி பகீஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.
தொழிற்சாலை உத்தியோகத்தரின் வீட்டு தோட்டத்தில் வேலை நேரத்தில் செய்துகொண்டிருந்த சமயம் விலங்குக்கு பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்ததாக கூறப்படும் இராமகிருஸ்ணணுக்கு தீர்வு கிட்டும் வரை பணி பகீஸ்கரிப்பை தொடர போவதாக டயகம கிழக்கு மூன்று பிரிவு தொழிலாளர்களும் பணி பகீஸ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.உயிரிழந்தவரின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு தொழிற்சாலை உத்தியோகத்தரும் டயகம பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here