இலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு தலைவர்

0
202

தென்னாபிரிக்க அதிபர் சிரில் ரமபோசா இலங்கைக்கு குறுகிய விஜயமொன்றை மேற்கொண்டதாக அதிபர் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட நிலையிலேயே அவர் இந்த குறுகிய விஜயத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விஜயத்தின் போது அதிபர் ரணில் விக்ரமசிங்கவை கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் சந்தித்து இருதரப்பு பிரச்சினைகள் தொடர்பில் அவர் கலந்துரையாடியதாக அதிபர் ஊடக பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here