நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் ( தேசிய பாடசாலை) பாடசாலையின் வணிக மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வணிக விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
வணிக மன்ற பொறுப்பாசிரியர் கா.மதுமதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் தரம் 12,13 வணிககல்வி பாடத்திற்கான அறிவாயுதம் என்ற நூல் வெளியீட்டு வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கடந்த இரு வாரங்களாக பாடசாலையில் நடைபெற்ற பேச்சு போட்டி,வினாவிடை போட்டி , கட்டுரை போட்டி,இலத்திரனியல் நிகழ்துகை போட்டி, கண்காட்சி என்பவற்றில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும், வெற்றி கேடயங்களும் வழங்கப்பட்டன,
இதன் போது மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வின் காப்பாளராக பாடசாலையின் அதிபர் ளு. ராஜன் அவர்களும், பிரதம அதிதியாக வலய கல்வி பணிமனையில் இருந்து வருகை தந்த உதவி கல்வி பணிப்பாளர் ( திட்டமில், வணிகத்துறை ) திருமதி. யு சுமதி அம்மணி அவர்களும் சிறப்பு அதிதிகளாக திருவாளர். ளு அழகுருசாமி (ஆசிரிய நிலைய முகாமையாளர் -நுவரெலியா ) அவர்களும் திருவாளர் ளு.சாரங்கன் ( வணிக பாட துறைக்கான ஆசிரியர் ஆலோசகர் ) அவர்களும் மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
மலைவாஞ்ஞன்