நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – பதுளை வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்தனர். முச்சக்கரவண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது
குறித்த விபத்து செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தில் உந்துருளியில் பயணித்தவர் படுகாயங்களுடனும் , முச்சக்கரவண்டி சாரதிக்கு சிறிய காயங்களுடன் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இவ் விபத்து பற்றி மேலும் தெரியவருவதாவது
நுவரெலியாவிலிருந்து மார்காஸ்தோட்டத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது பதுளை வீதியினூடாக பயணித்துவந்து மோட்டார் சைக்கிள் மோதுண்டதனாலேயே மேற்படி விபத்தானது சம்பவித்துள்ளது.
உந்துருளி மிக வேகமாக பயணித்ததாகவும், இதனால் உந்துருளி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி முச்சக்கரவண்டி மீது மோதி விபத்துக்குள்ளானதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றது.
சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

டி.சந்ரு செ.திவாகரன்




