நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காபெக்ஸ் தமிழ் வித்தியாலய அதிபர் மற்றும் நான்கு ஆசிரியர்களை உடன் இடமாற்றம் செய்ய கோரி அப் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள் சுமார் 350 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் நடந்த பகுதிக்கு ஹட்டன் வலய கல்வி பணிப்பாளர் நேரடியாக வந்து பாடசாலை ஆசிரியர்கள், அதிபர், பெற்றோர்களுடன் கலந்துரையாடியதோடு பாடசாலை பொறுப்புக்கள் அனைத்தும் தற்காலிகமாக உதவி அதிபரிடம் கையளிக்கபட்டது.பெற்றோர்கள் ஒன்றிணைந்து வலய கல்வி பணிப்பாளருக்கு மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
பெற்றோர்கள் கையளிக்கபட்ட மகஜரில் பாடசாலை நலன் கருதி கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் முழுமையாக ஈடுபட வேண்டும், தேவை உள்ள அனைத்து பாடங்களையும் முறையாக கற்று கொள்ள மாணவர்களுக்கு இடமளிக்க வேண்டும்.கற்றல் நடவடிக்கையில் ஈடுபடாத உள்ள ஆசிரியர் நான்கு பேரை உடன் இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை முன் வைத்து மகஜர் பெற்றோர்களினால் கல்வி அதிகாரியிடம் வழங்க பட்டமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்




