தோனி எதிர்கால தலைவர்! அரசியல் களத்தை கருத்தில் கொள்ள வேண்டும்: பிரபலம் கருத்து

0
157

அனைவருடனும் இணக்கமாக பணியாற்றும் பண்பு கொண்டவர் தோனி என ஆனந்த மகேந்திரா கருத்து.
மகேந்திர சிங் தோனி அரசியலுக்கு வர வேண்டும் என்ற தனது விருப்பத்தை பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டுள்ளார்.

இந்தியா உட்பட உலக நாடுகளில் பெருந்திரளான மக்களின் அன்பை பெற்றவர்கள் அரசியல் களத்திற்கு வருவது வழக்கம். அது விளையாட்டு, சினிமா துறை என நீளும்.இந்த நிலையில் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் வெளியிட்டுள்ள கருத்து வைரலாகியுள்ளது.

“எல்லோரையும் போல மகேந்திர சிங் தோனி மேலும் ஒரு சீசன் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடுவார் என்பதை அறிந்து நான் அக மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், என்னால் நீண்ட காலத்திற்கு அதனை எதிர்பார்க்க முடியாது. அவர் அரசியல் களத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என நான் நம்புகிறேன். அவர் எதிர்கால தலைவர். அனைவருடனும் இணக்கமாக பணியாற்றும் பண்பு, பணிவு மற்றும் புதிய உள்ளீடுகளை செய்ய விரும்பும் எண்ணமும் கொண்டவர்” என தெரிவித்துள்ளார்.

Anand Mahendra tweet

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here