விபத்துக்களை தடுக்கும் முகமாக இலத்திரனியல் வாயில்களாக மாற்றப்படும் ரயில் கடவைகள்

0
160

200 பேர் வரையில் ரயில் விபத்து மற்றும் தற்கொலைகள் மூலம் உயிரிழக்கின்றனர். மற்றும் 400 பேர் வரையில் ஊனமுற்று அங்கவீனநிலைக்க தள்ளப்படுகின்றனர்
அபாயகரமான ரயில் விபத்துக்களை தடுக்கும் முகமாக இலத்திரனியல் வாயிலை ( E- Gate ) திட்டமிட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,

வருடாந்தம் சுமார் 200 பேர் வரையில் ரயில் விபத்து மற்றும் தற்கொலைகள் மூலம் உயிரிழக்கின்றனர். மற்றும் 400 பேர் வரையில் ஊனமுற்று அங்கவீனநிலைக்க தள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.

ஆகவே, ரயில் விபத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இலங்கை ரயில்வே (SLR) நாடு முழுவதும் உள்ள ரயில்வே வலையமைப்பில் கிட்டத்தட்ட 400 பாதுகாப்பற்ற ரயில் கடவைகளை இரத்திரனியல் வாயிலாக மாற்றி அமைக்க உள்ளது.

இலங்கை ரயில்வே திட்டத்தின் அடிப்படையில், மாநில அபிவிருத்தி மற்றும் கட்டுமானக் கூட்டுத்தாபனத்துடன் (SD&CC) இணைந்து CodeGen International ஆல் இத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.

மேலும், அண்மையில் கொடகம புகையிரத நிலையத்திற்கு அருகில் அலத்திரனியல் வாயில் ஒன்று முன்னோடித் திட்டமாக வெற்றிகரமாகச் சரி செய்யப்பட்டு சுமுகமாகச் செயற்படுவதை அவதானிக்க முடிந்தது என்றார்.

1864 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்க இரயில்வே ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து பாதசாரிகள் கடவு வாயில்களில் ஏற்படும் மரண விபத்துக்கள் ஒரு முக்கிய பிரச்சினையாகும்.

ரயில்வே பாதசாரிகள் கடவு வாயில்களைப் பாதுகாப்பதற்கு ரயில்வே திணைக்களம் அதிகச் செலவை ஏற்படுத்துகிறது.

ஆனால், இன்னும் சுமார் 400 பாதுகாப்பற்ற வாயில்கள் உள்ளன. பாதசாரிகள் கடவு வாயில்களில் புகையிரத விபத்துக்களை தடுப்பது தேசியத் தேவையாக தற்போது மாறியுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இலத்திரனியல் முறை இதற்கு தீர்வாக அமையும் என நான் நம்புகிறேன்” என அமைச்சர் வலியுறுத்தினார்.

“இந்த அமைப்பை முழுமையாக தானியங்கி மற்றும் ரிமோட் மூலம் கட்டுப்படுத்தும் வகையில் மேம்படுத்தும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.

ஆனால், செலவு ரூ. 3.5 மில்லியன் ரூபாய் வரை எட்டப்படும் என நம்பப்படுகின்றது.

மேலும், அபிவிருத்தியாளர்கள் எதிர்கொள்ளும் மற்றொரு பிரச்சனை என்னவென்றால், மின்சாரம் செயலிழக்கும் போது இலத்திரனியல் எவ்வாறு இயக்கும் என்பது தான். எவ்வாறாயினும், இந்த பிரச்சினைகளுக்கான பதில்களைக் கண்டறிந்து, முழு ரயில்வே வலையமைப்பையும் ரயில்கள், பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு நீண்ட காலத்திற்குள் முழுமையாகப் பாதுகாப்பாக மாற்ற முடியும் என்று நான் நம்புகிறேன், ”என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here