றொரண்டோ நகரின் மிகப்பெரிய பொதுப் பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறியுள்ள லித்தியம் மின்கல தீ விபத்துகள்!

0
4
citynews

றொரண்டோ  Toronto நகரில் Lithium-ion Battery லித்தியம் மின்கலங்களால் ஏற்படும் தீ விபத்துகள், நகரின் மிகப்பெரிய மற்றும் தீவிரமாகி வரும் பொதுப் பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக றொரண்டோ   தீயணைப்பு படை பிரதானி Toronto Fire Chief Jim Jessop எச்சரித்துள்ளார்.

City Councilஇல் தனது 2025ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையைச் சமர்ப்பித்து உரையாற்றிய Jim Jessop, கடந்த மூன்று ஆண்டுகளில் Lithium-ion பேட்டரி தொடர்பான தீ விபத்துகள் 214 சதவீதம் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 50க்கும் மேற்பட்ட சம்பவங்களுக்கு தீயணைப்புப் படையினர் பதிலளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

E-bike பேட்டரிகள் வெடித்துச் சிதறும் வீடியோவைச் சுட்டிக்காட்டிய அவர், அடுக்குமாடி குடியிருப்புகளில் அதிக எண்ணிக்கையிலான ஈ-பைக்குகள் சேமித்து வைக்கப்படுவதால், மீட்புப் பணிகளின் போது தீயணைப்பு வீரர்கள் உள்ளே இருக்கும் போதே பேட்டரிகள் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.

ஒரே குடியிருப்பில் 12க்கும் மேற்பட்ட ஈ-பைக்குகள் சேமித்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த அவர், அடுக்குமாடி குடியிருப்புகளில் பைக்குகளைச் சேமித்து வைப்பதைக் கட்டுப்படுத்த சட்டரீதியான விதிமுறைகள் இல்லை என்றும்  கூறினார்.

இதற்கு தேவையான திருத்தங்களை மேற்கொள்ள Queen’s Park அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here