யாழில் பாடசாலை மாணவிக்கு வன்புணர்வு தொல்லை கொடுத்த ஆசிரியர்!

0
173

யாழ்ப்பாணம் தீவகத்திலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவிக்கு ஆசிரியர் ஒருவர் வன்புணர்வு தொல்லை கொடுத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இக் குற்றச்சாட்டில் 42 வயதான ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தரம் 7 இல் கல்வி கற்கும் 12 வயதான மாணவிக்கே இவ்வாறு தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மாணவி தன் தாயாரிடம் முறையிட்டுள்ளார். பாடசாலை அதிபரிடம் முறையிடப்பட்டபோதும் உரிய நடவடிக்கையெடுக்கவில்லை.

இதையடுத்து பொலிஸாரிடம் முறையிடப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவ் ஆசிரியர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

கைதான ஆசிரியர் ஏற்கெனவே சவலிகாமம் பகுதி பாடசாலையொன்றில் கல்வி கற்பிக்கும்பொழுது சில மாணவிகளை பாலியல் கொடுமைக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

எனினும் மாணவிகள் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க முன்வரவில்வை. இதையடுத்து அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு அவர் மீளவும் ஆசிரியர் சேவையில் இணைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here