2019 உலகக் கோப்பையின் முடிவில் இருந்து, இலங்கை 42 ஒரு நாள் போட்டிகளில் 18 ஆட்டங்களில் மட்டுமே வென்றுள்ளது. தனது தேசிய அணியான இலங்கை ஐசிசி உலகக் கோப்பை போட்டி தொடருக்கு தகுதி பெறும் என உலகின் புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
“இலங்கை மெகா போட்டியில் பங்கேற்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை, பங்கேற்கும் பத்து அணிகளிலும் இலங்கை அணி பலம் வாய்ந்தது.
எங்கள் அணி சிறப்பாக உள்ளது. விளையாட்டின் அனைத்து பிரிவுகளிலும் வெல்ல முடியும்” என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
“ஆம், உலகக் கோப்பைக்கு எங்களால் தானாகவே தகுதி பெற முடியவில்லை என்பது உண்மைதான், ஆனால் சமீபத்தில் எங்கள் அணியின் செயல்திறன் கணிசமாக அதிகரித்துள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரை வெல்ல முடிந்தது.
எவ்வாறாயினும், 2019 உலகக் கோப்பையின் முடிவில் இருந்து, இலங்கை 42 ஒரு நாள் போட்டிகளில் 18 ஆட்டங்களில் மட்டுமே வென்றுள்ளது, அவற்றில் 23 உலகக் கோப்பை சூப்பர் லீக்கின் ஒரு பகுதியாகும். அதில், ஏழில் வெற்றி பெற்றனர்.
எவ்வாறாயினும், இந்த உலகக் கோப்பை சூப்பர் லீக் சுழற்சியில் இலங்கை அணி குறிப்பாக சாதகமற்ற போட்டிகளை கொண்டிருந்ததையும் இங்கு குறிப்பிடலாம்.
அவர்கள் விளையாடிய எட்டு தொடர்களில் நான்கு இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய வலுவான அணிகளுக்கு எதிராக இருந்தது.
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகள் இலங்கையில் இடம்பெறவில்லை என்பதை மறந்துவிடக் கூடாது.
“அணி ஒரு போட்டியில் தோல்வியடைந்தாலும், தகுதி பெற முடியும், மேலும் இலங்கை அணியில் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்” என்று உலகின் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முரளிதரன் கூறினார்.




