2026 FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளைக் காண்பதற்காகக் கனடாவிற்கு (Canada) தற்காலிக விசா மூலம் வருகை தந்த பார்வையாளர்களில் 175 பேர் நாட்டில் தஞ்சம் (Asylum) கோரியுள்ளதை கனடாவின் குடிவரவுத் திணைக்களம் (IRCC) உறுதிப்படுத்தியுள்ளது.
உலகக் கோப்பைக்காக கனடாவிற்கு வருகை தந்த மொத்தம் 26,111 பார்வையாளர்களில் இருந்தே இந்த 175 பேரும் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ளனர்.
பங்களாதேஷ் (Bangladesh), புருண்டி (Burundi), கொலம்பியா (Colombia), ஈக்வடார் (Ecuador), எகிப்து (Egypt), கானா (Ghana), கென்யா (Kenya), நேபாளம் (Nepal), நைஜீரியா (Nigeria), பாகிஸ்தான் (Pakistan), சீனா (China) மற்றும் செனகல் (Senegal) ஆகிய 12 நாடுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு தஞ்சம் கோரியுள்ளனர்.
இதில் அதிகபட்சமாக கானாவிலிருந்து 25 பேரும், அதனைத் தொடர்ந்து கொலம்பியா, எகிப்து மற்றும் கென்யா ஆகிய நாடுகளிலிருந்து தலா 15 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
கனடாவின் றொரண்டோ (Toronto) மற்றும் வான்கூவர் (Vancouver) நகரங்களில் நடைபெற்ற 13 உலகக் கோப்பை போட்டிகளைக் காண பல்லாயிரக்கணக்கான சர்வதேசப் பார்வையாளர்கள் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.




