இன்றும் சில பகுதிகளுக்கு மழை

0
149

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வட மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்தில் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடமத்திய மாகாணத்திலும் புத்தளம், ஹம்பாந்தோட்டை, மன்னார் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது கி.மீ. 40 வரை பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here