மலையகம் 200 எனும். தொனிப்பொருளில் தேயிலை செய்கைக்கு உதவிய கங்காணிமார்கள் கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்டத்தில் கௌரவிப்பு.

0
162

மலையகம் 200 எனும் தொனிப்பொருளில் மலையகத்தில் இன்று பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்திய வம்சாவழியான மலையக மக்கள் 200 வருடங்களுக்கு முன் ஆங்கிலேயர்களால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டனர். இவ்வாறு வருகை தந்த மலையக தமிழ் பேசும் மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தேயிலை தோட்டங்களையும் இறப்பர் தோட்டங்களையும் உருவாக்கி இந்த நாட்டிற்கு அந்நியச் செலவாணியினை பெற்றுக்கொடுக்க அரும்பாடுபட்டுள்ளனர்.
இவ்வாறு அரும்பாடுபட்டு இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவி புரிந்த மக்கள் இன்றும் இரண்டாம் பிரஜையாகவே கணிக்கப்பட்டு அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர். ஏனைய இந்த நாட்டு மக்கள் அனுபவித்து வரும் உரிமைகள் சலுகைகள் புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே இன்றும் பலர் உள்ளனர்.

இந்நிலையில் ஒரு சிலர் தனது அயராத உழைப்பின் காரணமாக கல்வியினை பெற்று வைத்தியர்களாகவும் ஆசிரியர்களாகவும் ஏனைய தொழில் துறைகளிலும் உள்ளனர்.
இந்த தொழிலில் இவர்களை அமரத்;துவதற்கு உருதுணையாக இந்த தேயிலை இறப்பர் தோட்டங்களே இருந்துள்ளது. இதனை நினைவு கூறும் வகையில் வரலாற்றின் பதிவுகளையும் உரிமைகளையும் பெற்றுக்கொடுக்க வலியுறுத்தி கடந்த சில தினங்களாக மன்னாரிலிருந்து மாத்தளை வரைக்கும் நடை பவனியும், நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை வரையும் மற்றுமொரு நடைபவனியும் இடம்பெற்றன.

இந்நிலையில் சமூகத்தில் நல்ல நிலையில் வருவதற்கும் பெரும்பாலான பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரமாக இருப்பதற்கு இந்த தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்கள் துணை புரிந்துள்ளமையினால் இதனை கட்டிக்காப்பதற்கு அரும்பாடுபட்டு சேவையாற்றிய தோட்டத்தில் ஆரம்ப காலத்தில் சேவையாற்றிய கங்காணிமார்களை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று கொட்டகலை ஸ்டோனிகிளிப் கீழ் பிரிவு தோட்ட மக்கள் ஒழுங்கு செய்திருந்தனர்.

குறித்த நிகழ்வு இன்று 13ம் திகதி ஸ்டோனிகிளிப் தோட்டத்தில் கரகம் பாலிக்கும் இடத்தில் தோட்ட உதவி முகாமையாளர் தலைமையில் நடைபெற்றது.
குறித்த தோட்டத்தில் 1975 ஆண்டுகளில் கங்காணியாக கடமையாற்றிய 06 பேருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களின் காலத்தில் தோட்ட முகாமைத்துவதிற்கு உதவிய விதமும், அவர்களால் தேயிலை தோட்டங்கள் பாதுகாக்கபட்ட விதமும் நினைவு கூறப்பட்டன.

குறித்த நிகழ்வு பூஜை வழிபாடுகளை தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டதுடன் அவர்களின் வாழ்வு வளம் பெற வேண்டும் எனவும் பலராலும் கருத்துரைக்கப்பட்டன.
இந்நிகழ்வுக்கு முன்னாள் கொட்டகலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சிவனையா லெச்சுமணன் தோட்ட உதவி முகாமையாளர், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here