இறந்துவிட்டதாக கருதப்பட்டு தகனம் செய்ய எடுத்துச் செல்லப்பட்ட பெண் தகனம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கண்களை திறந்த சம்பவமொன்று இந்தியாவில் பெர்ஹாம்பூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.குறித்த பெண் சுவாசிக்காமல் உடல் அசைவுகளின்றி கண்களை திறக்காத நிலையில் இருந்ததால் அவர் இறந்து விட்டதாக எண்ணி கணவருக்கு தகவல் தெரிவித்ததாகவும் குறித்த பெண்ணின் கணவர் வைத்தியர்களிடம் பரிசோதிக்காமலும் இறப்பு சான்றிதழை பெற முயற்சிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலத்தை பிஜிபூரில் உள்ள மயானத்திற்கு தகனம் செய்ய எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் தகனம் செய்ய சில நிமிடங்கள் இருந்தபோது பெண் கண்களை திறந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றது.




