மகனால் தாய்க்கு நேர்ந்த கொடுமை

0
216

தனது தாயின் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்து அவரை மோசமாக தாக்கிய மகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இந்தியாவின் ஆந்திர மாநிலம், மதனபள்ளி அடுத்த குண்டவாரி பள்ளி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விவசாய நிலத்தை பாகம் பிரித்து தர வேண்டுமென மகனான சீனிவாசலு ரெட்டி பெற்றோரிடம் தகராறு செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நிலத்தை பாகம் பிரித்து தர வேண்டுமென பெற்றோரிடம் அவர் தகராறில் ஈடுபட்டார்.

இதற்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த சீனிவாசலு ரெட்டி அவரது தாயின் தலை முடியை பிடித்து தரதரவென இழுத்துச் சென்று கீழே தள்ளி காலால் சரமாரியாக உதைத்து தாக்கினார்.

இதனை தடுக்க வந்த தந்தையை பிடித்து கீழே தள்ளி மிதித்து கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவங்களை அங்கிருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் காணொளியாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.இந்த காணொளி பார்ப்பவர்களின் கண்களை கலங்க செய்தது. இதனைப் பார்வையிட்ட காவல்துறையினர் பெற்றோரிடம் புகாரை பெற்று சீனிவாசலு ரெட்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here