ஐ.சி.சி விதியை மீறிய இந்திய அணித்தலைவர்!

0
109

இந்திய மற்றும் இங்கிலாந்திற்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் நிலையில் இந்த ஆட்டத்தில் இந்திய டெஸ்ட் அணியின் தலைவர் சுப்மன் கில் விதிமுறைகளை மீறியதாக சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது முதல் நாள் போட்டியில், சுப்மன் கில் தனது காலில் கருப்பு நிற காலுறை அணிந்து விளையாடியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் இவ்வாறு கருப்பு நிற காலுறை அணிந்து விளையாடுவது ஐசிசியின் ஆடைக்கட்டுப்பாட்டு விதியை மீறும் செயலாகும். ஐசிசி விதிகளின்படி வெள்ளை அல்லது கிரீம் அல்லது லேசான சாம்பல் நிறம் ஆகிய வண்ணங்களில் மட்டுமே காலுறை அணிய அனுமதிக்கப்பட்டுள்ளது.

விதிகளை மீறிய செயல் என்பதால், போட்டிக் கட்டணத்தில் இருந்து 10 முதல் 20 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here