நுவரெலியா- ஹட்டன் நுவரெலியா- பதுளை வீதிகள் மற்றும் நகர் புறங்களில் சுற்றி திரியும் மட்ட குதிரைகள் பிடிக்கப்பட்ட நிலையில் அவற்றை உரிமையாளரிடம் ஒப்படைக்க நடவடிகை எடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா நகர் பகுதியில் திரியும் குதிரைகள் நீண்ட காலமாக அங்கு வசிப்பவர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வந்தன.
அவை வீதிகளை மறித்து, மக்களை தாக்கி , காய்கறி பயிர்களை சேதப்படுத்தி,வந்ததோடு அதன் கழிவுகளால் குடியிருப்பாளர்களுக்கு நோய் ஏற்பட்டது.
இதன் காரணமாக நுவரெலியா நகராட்சி மன்றம் வீதியில் திரியும் குதிரைகளைப் பிடிக்க வேலி அமைத்து, தேவையான உணவு மற்றும் தண்ணீரை வழங்கியதோடு, அவற்றைப் பராமரித்து வந்தது.
இந்நிலையில் குதிரைகளின் உரிமையாளர்கள் அவற்றைப் முறையாக பராமரிப்பதாக உறுதியளித்துள்ளனர்,
இதனையடுத்து கடுமையான நிபந்தனைகளின் கீழ் 9000 முதல் 17000 வரை தண்டப்பணம் செலுத்தும் படியும் மீண்டும் குதிரைகள் பராமரிக்கப்படாவிட்டால் அவை இராணுவத்தில் ஒப்படைக்கப்படும் அல்லது இல்லாவிட்டால் ஏலத்தில் விடப்படும் என நுவரெலியா நகர் மேயர் எச்சரித்து அவற்றை மீண்டும் ஒப்படைத்துள்ளார்.