அனுபவித்த வலிகள்…சொல்லும்போதே கண்கலங்கிய நடிகர் சூரி!

0
90

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளவர் நடிகர் சூரி. இவரது நடிப்பில் சமீபத்தில் ‘மாமன்’ படம் வெளியானது. பிரசாந்த் பண்டிராஜ் இயக்கியிருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து, மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி தனது அடுத்த படமாக ‘மண்டாடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தான் அனுபவித்த வலிகள் பற்றி ஒரு விழாவில் பேசும்போது நடிகர் சூரி கண்கலங்கினார். அவர் பேசுகையில்,

`பல கஷ்டங்களுக்கு பிறகு சினிமாவில் ஒரு வழியாக வாய்ப்பு கிடைத்து, எனக்கு டிரஸ் அளவு எடுத்தபோது கை, காலெல்லாம் நடுங்கி கண்ணு கலங்கியது. திடீரென அந்த கேரக்டருக்கு இன்னொருத்தர ரெக்கமண்ட் பண்ணிட்டாங்க. உடனே சட்டையை கழட்டுங்கள் என்றார்கள். அதே இடத்தில் சட்டையை கழட்டினேன்’’ என்றார்.

dailythanthi

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here