பிச்சைக்காரன் 3 – “கேஜிஎப்” மாதிரி பிரம்மாண்டமாக இருக்கும்!

0
11

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக எண்ட்ரி கொடுத்து கதாநாயகனாக கலக்கி வருபவர் விஜய் ஆண்டனி. நான், சலீம், பிச்சைக்காரன் வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் கவனிக்கத்தக்க இடத்தை பிடித்துள்ள விஜய் ஆண்டனி நடிப்பில் தற்போது ‘நூறு சாமி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் சசி இயக்கி வரும் இந்த படம் மே மாதம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் தொடர்பான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விஜய் ஆண்டனியிடம் ‘பிச்சைக்காரன் 3’ படம் உருவாக வாய்ப்பு இருக்கிறதா? என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த விஜய் ஆண்டனி, “பிச்சைக்காரன் 3 கண்டிப்பாக உருவாகிறது. பிச்சைக்காரன் 2 படத்தை விட பெரிய படமாக இது இருக்கும். அதாவது கேஜிஎப் படம் மாதிரி பிரமாண்டமாக இருக்கும்” என்றார்.

‘பிச்சைக்காரன்’ படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியானது. விஜய் ஆண்டனியின் சினிமா கேரியரில் முக்கிய படமாக இது இருந்தது. சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த இந்த படத்தை தொடர்ந்து ‘பிச்சைக்காரன் 2’ படம் 2023ல் வெளியானது. இது எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இந்த நிலையில்தான் தற்போது ‘பிச்சைக்காரன் 3’ படம் கண்டிப்பாக வெளியாகும் என்ற அப்டேட்டை கொடுத்து இருக்கிறார் விஜய் ஆண்டனி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here