10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்று முடிவடைந்த நிலையில் சூப்பர் 8 சுற்று இன்று முதல் தொடங்குகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் -நியூசிலாந்து அணிகள் மோதுகிறது.
இந்த போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் நமீபியாவுக்கு எதிரானபோட்டியில் நட்சத்திர வீரர் பாபர் அசாம் அவரது வழக்கமான 4-வது இடத்தில் களமிறக்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடர்பாக அவர் கூறியதாவது,
இது அணிக்குத் தேவையானதைப் பற்றியது. பவர்பிளேயின் போது பாபர் அசாமின் ஸ்ட்ரைக் ரேட் திருப்திகரமாக இல்லை. அதை நாங்கள் அவரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.
இப்போது அவரிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கும் விஷயம், மிடில் ஓவர்களில் தரமான பேட்டராக பார்க்கிறோம்.என தெரிவித்துள்ளார்.