இந்திய அணி வீழ்த்தப்படக்கூடிய அணிதான். ஆனால் இந்தியா ஒரு அற்புதமான அணி. எளிய விஷயங்களை சிறப்பாகச் செய்ய வேண்டும், அதுதான் அன்று நாங்கள் செய்தது. என்று தென் ஆப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இத்தொடரில் ஐந்து போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா, அரையிறுதிக்கான வாய்ப்பை பலப்படுத்தியுள்ளதுடன், இன்னும் கவனக்குறைவின்றி செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.
போட்டிக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் தென் ஆப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லர் இந்தியாவை பாராட்டியபோதும் தோற்கடிக்கக் கூடிய அணியே என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
“இந்திய அணி வீழ்த்தப்படக்கூடிய அணிதான். ஆனால் இந்தியா ஒரு அற்புதமான அணி. எளிய விஷயங்களை சிறப்பாகச் செய்ய வேண்டும். அதுதான் அன்று நாங்கள் செய்தது. தென் ஆப்பிரிக்கா இப்போது முதிர்ச்சியடைந்த அணி. பல வீரர்கள் நீண்ட காலமாக ஒன்றாக விளையாடி வருகின்றோம். அது அழுத்தமான தருணங்களில் மிகவும் உதவுகின்றது. ஆனால் இதோடு முடியவில்லை, இன்னும் எங்கள் பெரு விருப்பம் நோக்கிச் செல்ல வேண்டும், அதை அடைய வேண்டும்.
வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஒரு பெரிய ஐசிசி கோப்பை வெற்றிதான் எங்கள் விருப்பம். இந்தியாவுக்கு எதிரான போட்டி எளிதாக இல்லை. இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது எப்போதும் கடினம். அவர்களுடன் நாங்கள் பலமுறை விளையாடியிருக்கின்றோம்.
இரண்டு பெரிய அணிகள் மோதும்போது, நீண்ட நேரம் கிரிக்கெட்டின் எளிய விடயங்களை சரியாகச் செய்வது முக்கியம். அழுத்தம் வரும்போது அதை தாங்கிக் கொண்டு கடந்து செல்ல வேண்டும். இது முழு அணியின் முயற்சியால்தான் சாத்தியமாகும்.
வீரர்கள் திட்டங்களை மிகச் சிறப்பாக நிறைவேற்றினர். லுங்கி இங்கிடி நிறைய ஸ்லோ பந்துகளை வீசி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். அதிக சிக்ஸர்களும் பவுண்டரிகளும் அடிக்கும் ஆபத்தான இந்திய அணிக்கு எதிராக, அவர்கள் திறமையானவர்கள் என்பதை ஏற்றுக்கொண்டு வேறுபட்ட திட்டங்களை வகுப்பதே முக்கியம். கேஷவ் மகாராஜ் அனுபவம் மிக்கவர்.
அழுத்தமான சூழ்நிலைகளில் அவர் பல ஓவர்களை வீசியுள்ளார். பந்துவீச்சாளர்கள் அனைவரும் அபாரமாக செயல்பட்டனர்.” என தெரிவித்துள்ளார்.




