இந்தி மொழி சின்னத்திரை தொடர்களில் கலக்கிய ஆயிஷா கான், பின்னர் படங்களில் நடிக்கத் தொடங்கினார். ‘ஜாட்’, ‘கிஸ்கிஸ்கோ பியார் கரூன்-2’ படங்களில் நடித்தார். துரந்தர் படத்தில் இவரது வளைவு நெளிவான ஆட்டமும் பேசப்பட்டது.
இதற்கிடையில் தினந்தோறும் தனக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதாக அவர் பகீர் புகார் கூறியுள்ளார்.
அவர் கூறும்போது, எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினந்தோறும் என் உடல் அங்கங்கள் பற்றி குறிப்பிட்டு, பாலியல் ரீதியாக பேசுகிறார்கள். நான் என்ன உடை அணிந்தால் யாருக்கு என்ன பிரச்சினை? இவர்களின் மனநிலை ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக போகிறது. தரக்குறைவான விமர்சனங்களை பேசும்போது, அது சம்பந்தப்பட்டவரின் மனதை காயப்படுத்துமே என்று யோசிக்க மாட்டார்களா…
அந்தவகையில் எனக்கு ஒவ்வொரு நாளும் பாலியல் வன்கொடுமை மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. அந்த மோசமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒரு பிரபலமாக இருப்பதால் இவ்வளவு காயத்தை சந்திக்க வேண்டுமா? என்ற யோசனை, ஒவ்வொரு நாளும் என்னை பயமுறுத்துகிறது” என்று குறிப்பிட்டார்.




