நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில் விஜய்க்கு நடிகை ஒருவருடன் தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். இச்செய்தி வெளியான நிலையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடிகை த்ரிஷாவுடன் நடிகர் விஜய் கலந்து கொண்டது சர்ச்சையானது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்துக்கு வந்த த்ரிஷாவிடம், விஜய்யுடன் ஒன்றாக திருமண விழாவில் கலந்து கொண்டது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதில் ஏதும் சொல்லாமல் மவுனமாக சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.




