மும்பையை வீழ்த்தியதும் ஆர்ப்பரித்த விராட் கோலி!

0
34
dailythanthi

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராய்ப்பூரில் நேற்றிரவு நடந்த 54-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய ஆர்.சிபி அணி கடைசி பந்தில் வெற்றி இலக்கை எட்டியது.

கடைசி வரை பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்றதால் ரசிகர்கள் மட்டுமின்றி ஆர்.சிபி வீரர்களும் ஆக்ரோஷமாக கொண்டாடினர். அந்த வகையில் விராட் கோலியும் தனது வழக்கமான பாணியில் ஆர்ப்பரித்தார். விராட் கோலியின் இந்த வெற்றிக்கொண்டாட்டம் வைரல் ஆகி வருகிறது. ஐபிஎல் தொடரில் 11-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணி 7-வது வெற்றியை பெற்றதுடன், புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. 8-வது தோல்வி கண்ட மும்பை அணியின் பிளே-ஆப் சுற்று வாய்ப்பு முடிந்தது. மும்பை அணி தொடர்ந்து சொதப்பி வருவது அந்த அணி ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here