அவசரம் வேண்டாம்- டிரம்ப் அறிவுறுத்தல்!

0
2

வளைகுடா பிராந்தியத்தில் ஈரான்-அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் அமலில் இருக்கிறது. ஆனாலும், ஹார்முஸ் நீரிணை மூடல் மற்றும் ஈரானின் கடற்பகுதி முற்றுகை காரணமாக இரு தரப்புக்கு இடையே ஒப்பந்தம் எட்டப்படுவதில் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது.எனினும் இந்த சிக்கல்களை போக்கி அங்கு நிரந்தர அமைதிக்கான ஒப்பந்தம் எட்டுவதற்கு அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்பில் இருந்து தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஈரானுடன் விரைவில் அமைதி ஒப்பந்தம் எட்டப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். குறிப்பாக ஹார்முஸ் நீரிணையைத் திறப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடங்கிய ஒரு உடன்பாடு தொடர்பாக ஈரானுடன் பெருமளவில் பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. ஒப்பந்தத்தின் இறுதிக்கட்ட அம்சங்கள் மற்றும் விவரங்கள் தற்போது விவாதிக்கப்பட்டு வருகிறது. அது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்” என்று டிரம்ப் கூறியிருந்தார்.

இதனால் ஈரான் – அமெரிக்கா இடையே விரைவில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் அவசரம் காட்ட வேண்டாம் என்று அமெரிக்க பேச்சுவார்த்தைக் குழுவுக்கு டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக டிரம்ப் கூறியிருப்பதாவது: ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் இரு தரப்பும் தங்களுக்கான நேரத்தை எடுத்துக்கொண்டு சரியான முடிவை எட்ட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை ஈரான் அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். இது குறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் எஸ்மாயில் பகாயி கூறுகையில், ஒப்பந்தத்தை எட்டுவதில் இரு தரப்பும் “மிக அருகிலும், மிக தூரத்திலும்” உள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here