ஜெர்மனியின் சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றான பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் பகல் 1 மணியளவில் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு போயிங் நிறுவனத்துக்கு சொந்தமான ட்ரீம்லைனர் விமானம் இயக்கப்பட விருந்தது. பயணிகள் இந்த விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக விமானத்தின் முன்சக்கரத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டு திடீரென உள்வாங்கியது. இதனால் விமானத்தின் முன்பகுதி பயங்கர சத்தத்துடன் தரையில் மோதியது. 200-க்கும் மேற்பட்டவர்கள் அமர கூடிய வகையான இந்த விமானத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் கூட்டம் அவ்வளவாக இல்லாததால் பெரும் அசாம்பவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்தில் விமானிகள், ஊழியர்கள் என 14 பேர் காயமடைந்தனர். அவர்களை ஆம்யூலன்ஸ்கள் மூலம் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.




