தென்னாப்பிரிக்க பூங்காவில் துயரம் – கனேடிய சுற்றுலாப் பயணி தவறுதலாகச் சுட்டுக் கொலை!

0
24

தென்னாப்பிரிக்காவின் புகழ்பெற்ற குருகர் தேசிய பூங்காவில் (Kruger National Park) கடந்த புதன்கிழமை மாலை நடைபெற்ற இரவு நேர பார்பிக்யூ பிக்னிக் (Bush braai) நிகழ்வின் போது, 69 வயது கனேடிய சுற்றுலாப் பயணி ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இது ஒரு விபத்து என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பூங்காவின் தனியார் வழிகாட்டி (Guide) ஒருவர் வைத்திருந்த துப்பாக்கியைப் பார்த்த கனேடியர், “இது நிஜமான துப்பாக்கியா?” என்று கேட்டுள்ளார்.

அதற்கு அந்த வழிகாட்டி அது உண்மையான துப்பாக்கிதான் என விளக்கிக் காட்ட முயன்றபோது, எதிர்பாராதவிதமாகத் துப்பாக்கி இயங்கி, குண்டு கனேடியரின் மேல் உடற்பகுதியில் பாய்ந்துள்ளது.

அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்துத் தென்னாப்பிரிக்க தேசிய பூங்கா நிர்வாகம் (South African National Parks) இரங்கல் தெரிவித்துள்ளதோடு, அலட்சியமாகத் துப்பாக்கியைக் கையாளுதல் மற்றும் மரணத்தை ஏற்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

ஒட்டாவாவில் (Ottawa) உள்ள கனேடிய  வெளிவிவகார அமைச்சு (Global Affairs Canada) இது குறித்து உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here