கனடாவின் மிசிசாகா (Mississauga) நகரில், கடந்த வியாழக்கிழமை இரவு 70 மற்றும் 71 வயதுடைய தம்பதியினர் அவர்களது வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர்.
இந்தத் துயரமான சம்பவம் தொடர்பாக, உயிரிழந்தவர்களின் 46 வயது மகனான ஜோர்டான் சாங்வின் (Jordan Sangwin) என்பவரை பீல் பிராந்திய பொலிஸார் (Peel Region Police) தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஹுரோண்டாரியோ தெரு (Hurontario Street) மற்றும் லேக்ஷோர் வீதி கிழக்கு (Lakeshore Road East) பகுதியில் உள்ள வீடொன்றில் நடந்த இந்தத் தாக்குதல் குறித்துத் தகவல் அறிந்து வந்த அவசரக் காலப் பணியாளர்கள், படுகாயமடைந்த தம்பதியினரைக் காப்பாற்ற முயன்ற போதிலும், அவர்கள் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
சந்தேக நபரான Jordan Sangwin ஆயுதங்களுடன் நடமாடக் கூடிய ஆபத்தானவர் என்பதால், அவரைப் பொதுமக்கள் யாரும் நெருங்க வேண்டாம் எனவும், உடனடியாக 911 என்ற அவசர எண்ணிற்கு அழைக்குமாறும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
மெலிந்த உடலமைப்புடன், 5 அடி 10 அங்குல உயரமுடைய அவர், கடைசியாக நீல நிறச் சட்டை, கட்டம்போட்ட அரைக்காற்சட்டை மற்றும் தொப்பி அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




