றொரண்டோ பியர்ஸன் விமானநிலையத்தின் 1 மற்றும் 3 முனையங்களை நவீனமயமாக்க $1.5 பில்லியன் மதிப்பிலான புதிய திட்டம்!

0
2
citynews

கனடாவின் (Canada) மிகப்பெரிய விமானநிலையமான Toronto Pearson International Airport-இன் Terminal 1 மற்றும் Terminal 3 ஆகிய முனையங்களை நவீனமயமாக்கி, மேம்படுத்துவதற்காக 1.5 பில்லியன் டொலர் (CAD) செலவிலான புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘Pearson LIFT’ என்ற 10 ஆண்டு கால நீண்டகால முதலீட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த திட்டமானது, கனடா விமானநிலைய வரலாற்றிலேயே மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய உட்கட்டமைப்பு திட்டமாக கருதப்படுகிறது.

விமானநிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை 2025-இல் 47 மில்லியனாக இருந்த நிலையில், 2030-களின் மத்தியில் 65 மில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வளர்ச்சியை எதிர்கொள்ளும் வகையில் Check-in பகுதிகள், பாதுகாப்பு சோதனைகள், சுங்கம் மற்றும் குடிவரவு வசதிகள் (customs and immigration), விளக்குகள் மற்றும் உணவகங்கள் போன்றவை இந்தத் திட்டத்தின் கீழ் நவீனமயமாக்கப்படவுள்ளன.

விமானநிலையத்தின் இயல்பு வழமையான பணிகளுக்கு எந்த இடையூறும் இன்றி, கட்டம்பக்கமாக (staged construction) இந்த கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here